கோவை பகுதியில்  இரண்டு ஒப்பந்ததாரர்களின் கட்டுப்பாட்டில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு , மே மற்றும் ஜீன் மாத சம்பளங்கள்  வழங்கப்படவில்லை. பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியும்  அதில் எவ்வித  முன்னேற்றமில்லை  . பி.எஸ்.என்.எல் ஊழியர் சங்கத்துடன் இணைந்து  பல கட்ட போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. பிரச்சனை தீர்ந்தபாடில்லை. எனவே 21-07-2014 அன்று கருப்புப்பட்டை  அணிந்தும், 25-07-2014 அன்று  ஆர்ப்பாட்டம் நடத்தியும்  மேலும் பிச்சையெடுக்கும் போராட்டம் நடத்தியும்  நம் எதிர்ப்பை தெரிவித்தோம். இதன் தொடர்ச்சியாக இன்று திருப்பூர் மெயின் தொலைபேசி நிலையத்தின் முன் சங்கு ஊதி பாடை தூக்கும் போராட்டம் நடைபெற்றது அதன் புகைப்பட காட்சிகள்