8.3.14 - சர்வதேச
மகளிர் தின வாழ்த்துக்கள் . . ....................
C.வினோத்குமார்
மாநில செயலர்
TNTCWUமாநில செயலர்
பெண்ணுக்கு விடுதலை நீரில்லை யென்றால்
பின்னிந்த வுலகினிலே வாழ்க்கையில்லை
- பாரதியார்
o
திருச்சியில் சர்வதேச மகளிர் தினம்
திருச்சித் தொலைத்தொடர்பு பொதுமேலாளர் அலுவலகத்தில், BSNL உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பாக, அனைத்து பெண்-அலுவலர் மற்றும் ஊழியர்களைச் சந்தித்து, சர்வதேச பெண்கள்தின வாழ்த்து அட்டை வழங்கப்பட்டது.
11-03-2014 செவ்வாய் காலையில் நடந்த இந்த நிகழ்வில், திருச்சி மாவட்ட BSNL உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்புக் குழுவின் கன்வீனர் மு.மல்லிகா, பூம்பாவையுடன் திருச்சி BSNL அலுவலகத்தைச் சேர்ந்த மணிமேகலை, தேவகி, சாந்தி, தேவி, மேகலை, மலர்க்கொடி, முதலானோர் கலந்துகொண்டனர்.
அதுசமயம், BSNL ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் அஸ்லாம் பாட்ஷா, தலைவர் தேவராஜன், பொருளாளர் கோபி, மற்றும் மாவட்டப் பொறுப்பாளர்கள் சண்முகம், நாகராஜன், அன்பழகன், பால்ராஜ், ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் பாண்டி, மாவட்டப் பொறுப்பாளர் ராஜேந்திரன் மற்றும்பலர் உடன்வந்து அனைத்துப் பெண் தோழியர்களுக்கும் சர்வதேசப் பெண்கள் தின வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்ந்தனர்.