என்எல்சி ஒப்பந்த தொழிலாளி சுட்டு கொள்ளப்பட்டதை கண்டித்து புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


புதுச்சேரி,மார்ச்.18-

என்எல்சி ஒப்பந்த தொழிலாளி ராஜ்குமாரை சுட்ட தொழில்பாதுகாப்புபடை வீரர் மீது கொலை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.ராஜ்குமார் குடும்பத்திற்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும்.அவரது குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும்.தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பை  என்எல்சி நிர்வாகம் உறுதி படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி பிஎஸ்என்எல் தலைமை பொதுமேலாளர் அலுவலகம் எதிரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.சங்கரன்,ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் மாவட்டத்தலைவர் ஏ.முருகையன் ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினார்.ஊழியர் சங்கத்தின் மாவட்ட உதவித்தலைவர் கொளஞ்சியப்பன்,தொமுச மாநில உதவிச்செயலாளர் அன்பழன்,ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் அகில இந்திய செயலர் குமார்,சேவா சங்கத்தின் மாநில அமைப்பு செயலர் ரகு,ஒப்பந்த ஊழியர் மாவட்டச்சங்கத்தின் செயலாளர் மகாலிங்கம் உள்ளிட்ட திரளான பிஎஸ்என்எல் ஊழியர்கள்,ஒப்பந்த ஊழியர்கள் திரளாக இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.என்.எல்.சி. ஒப்பந்த ஊழியர் ராஜ்குமார்
சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து
புதுக்கோட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம்!
புதுக்கோட்டை – மார்ச்-18
      நெய்வேலி பழுப்பு நிலக்கரிச் சுரங்கத்தில் ஒப்பந்த ஊழியர் ராஜ்குமார் அராஜகமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கணடித்து, புதுக்கோட்டை தொலைத்தொடர்பு ஊழியர்சங்கத்தினர்  ஒப்பந்த ஊழியர் சங்கத்தினருடன் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுக்கோட்டைத் தொலைத்தொடர்பு வளாகத்தில் 18-03-2014 அன்று முற்பகல் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, கிளைத்தலைவர் நடராஜன் தலைமை வகித்தார்.
கண்டன ஆர்ப்பாட்டத்தினிடையே நடந்த விளக்க்கக் கூட்டத்தில, தொலைத் தொடர்பு ஊழியர்சங்க மாவட்டத் துணைத்தலைவரும் உழைக்கும் மகளிர் திருச்சி மாவட்டக்குழு ஒருங்கிணைப்பாளருமான மு.மல்லிகா சிறப்புரையாற்றினார். தொடர்ந்து கீரனூர் கிளைச்செயலர் ராஜேந்திரன், ஒப்பந்த ஊழியர் சங்க மாநிலச் செயற்குழு உறுப்பினர் கல்லடியான் ஆகியோர் உரையாற்றினர்.
தொலைத்தொடர்பு ஊழியர் சங்க நிர்வாகிகள் ராஜேந்திரன், கிருஷ்ணமூர்த்தி, சரவணன், மற்றும் ஒப்பந்த ஊழியர் சங்க நிர்வாகிகள் கவிபாஸ்கர், திருநாவுக்கரசு ஆகியோருடன், யாஸ்மின் லோகேஸ்வரி முதலான பெண்கள் உள்ளிட்ட ஐம்பதிற்கும் மேற்பட்ட ஊழியர் பலரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
முன்னதாக, தொலைத்தொடர்ப ஊழியர் சங்க்க் கிளைச்செயலர் ஆறுமுகம் வரவேற்றார், ஒப்பந்த ஊழியர்சங்க மாவட்டச் செயற்குழு உறுப்பினர் விசுவநாதன் நன்றி கூறினார்.