கொடி காக்க உயிர் துறந்த குமரன்-JAN-11- நினைவு நாள்.

கொடி காத்த கோமான் 

                    
தடையை மீறி ஊர்வலம் சென்றபோதுகூட்டத்தை கலைக்கதடியடி நடத்தினர் காவலர்கள்அதில் படுகாயம் அடைந்தான்அந்த இளைஞன்.  ‘வந்தே மாதரம்’ என்று கூறியபடி கையில்பிடித்திருந்த தேசியக்கொடியுடன் கீழே சரிந்தான் அந்தஇளைஞன்ஒருபுறம் தடியடியால் மண்டை பிளந்து ரத்தம் ஓடிக்கொண்டிருக்கிறது.உயிருக்கு போராடிய அந்நிலையிலும்,கரத்தில் பற்றிய தேசியக்கொடியை அவனது விரல்கள் பற்றியேஇருந்தனமயங்கிச் சாய்ந்த அந்த இளைஞன் பின்னர்மருத்துவமனையில் வீர மரணம் அடைந்தான்.  அவன் வேறுயாருமல்லதாயின் மணிக்கொடி காக்க உயிர் துறந்தவர் குமாரசாமி என்று அழைக்கப்பட்ட திருப்பூர்குமரன் தான்.  இறக்கும் தறுவாயிலும் கொடியை விடாத அவரது தேசபக்தியால்தான்  கொடி காத்தகுமரன் என்று இன்றும் அழைக்கப்படுகிறார்.1904ம் ஆண்டு அக். 4ம் தேதி,  தமிழகத்தின்ஈரோடு அருகிலுள்ள சென்னிமலையில்,  ஏழை நெசவாளர் குடும்பத்தில் குமரன் பிறந்தார்போதியவருவாய் இன்றி  குடும்பம் வறுமையில் வாடியதுஎனினும் செம்மையாகவும்கவுரவமாகவும் வாழ்ந்தகுமரன்.இளம் வயதிலேயே நாட்டுபற்று மிக்கவராகத் திகழ்ந்தார் குமரன்விடுதலை வேட்கையால்உந்தப்பட்டு திருப்பூரில் நடந்த அறப்போராட்டங்களில் கலந்து கொண்டார்பின்னர் பலபோராட்டங்களுக்குதலைமையேற்றார்.1932ம்ஆண்டுஜனவரியில்காந்திய டிகளின்   சட்ட   மறுப்பு   இயக்கத்துக்கு ஆதரவாக வீரத்துக்கு பெயர் போன தமிழக மண்ணில் போராட்டம் நடந்ததுஇதுவேகுமரனின் தலையெழுத்தை தீர்மானிக்கும் சரித்திர நிகழ்வாக அமைந்தது.திருப்பூரில் தேசபந்துஇளைஞர் மன்ற உறுப்பினர்கள் அச்சமயம் ஏற்பாடு செய்த மறியல் போராட்டத்தில் தீவிரமாகப்பங்குகொண்டு கையில் தேசியக் கொடியினை ஏந்திதொண்டர் படைக்குத் தலைமை ஏற்று,அணிவகுத்துச் சென்றார் குமரன்.  காவலர்கள் தடியடி நடத்திதுப்பாக்கி குண்டுகளை பாய்ச்சியபோதும் ‘வந்தேமாதரம்… வந்தே மாதரம்...’ என்று முழங்கிக் கொண்டே அவரது இறுதி மூச்சு நின்றநாள், 1932ம் ஆண்டு ஜன. 11ம் தேதியாகும்.  மானம் காக்க ஆடை கொடுக்கும் திருப்பூர் நகரில்தேசியகொடியின் இழுக்கை போக்க உயிர் துறந்தார் குமரன். அவரது மரணம்மக்களிடையே குறிப்பாகஇளைஞர்களிடையே சுதந்திர வேட்கையை தூண்டியது.ஆலமரம் கீழே விழும்போது மரம் மட்டுமேநமக்குத் தெரிகிறதுஅதன் அடியில் சிக்கி சிதறிய சிறு செடிகளை எவரும் நினைப்பதில்லை.  நாடுசுதந்திரமடைந்ததன்  நிறைவை நாம் கொண்டாடி மகிழும் வேளையில்திருப்பூர் குமரன் போன்றஉயிர் தியாகம் புரிந்த எண்ணிலடங்காத தியாக உள்ளங்களை நன்றியுடன் நினைவு கூறுவதே நாம்அவர்களுக்கு செலுத்தும் நன்றிக் கடன் ஆகும்.  


நன்றி : தோழர்.சூரியன் BSNLEU MADURAI